×

உக்கிரமடையும் போர்!: இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…இஸ்ரேலில் குவிந்த உலகின் கண்கள்..!!

டெல்அவிவ்: போர் உக்கிரமாக நடைபெற்று வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 12-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்த போரில் தீவிரவாதிகள் கொல்லப்படுவது ஒரு புறம் எனில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, காசா நகரில் மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது, இஸ்லாமிய ஜிகாத் போராளிக் குழு என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுதான ராக்கெட் விழுந்ததால் 500 பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்தடைந்தார். பிரத்யேக ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் அதிபர் ஜோ பைடன் டெல்அவிவ் சென்றடைந்தார்.

இஸ்ரேலுக்கான தனது ஆதரவை ஆணித்தரமாக உறுதிப்படுத்தும் வகையில் பைடன் வருகை அமைந்துள்ளது. இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. ஹமாசை இஸ்ரேல் ஒழிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து அதிபர் பைடன் ஆலோசனை நடத்துகிறார். ஜோ பைடன் வருகையால் டெல் அவிவ் நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

The post உக்கிரமடையும் போர்!: இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…இஸ்ரேலில் குவிந்த உலகின் கண்கள்..!! appeared first on Dinakaran.

Tags : US President ,Joe Biden ,Israel ,Tel Aviv ,Hamas… ,Israel… ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்